தமிழ் திரையுலகிற்கு மட்டும் அல்லாமல், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட அனைத்து திரையுலகினருக்கும் மிகப்பெரிய சவாலாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். பிரமாண்டமான பொருட்செலவில் உருவான பல திரைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு, தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
இவற்றில் மிக முக்கியமானது
தமிழ் ராக்கர்ஸ். இவர்கள் தமிழ் கன் என்ற பெயரிலும், வேறு சில பெயர்களிலும் இணையத்தில் இயங்கி வருகின்றனர்.
தமிழ் ராக்கர்ஸ் யார்?
அவர்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்பது குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்ட போது, ‘‘தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தனி நபர் நடத்துவதல்ல. அதுவும் தமிழகத்தில் இருந்து அவர்கள் நடத்தவில்லை. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் திரைப்படங்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் மட்டும் ரிலீஸ் ஆகும் படங்களையும் வெளியிடுகிறார்கள். எனவே அவர்களின் ஆதரவாளர்கள் இங்கேயும் இருக்கிறார்கள்.
அட்மின்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களை கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒரு இணையத்தை முடக்கினால் வேறு பெயரில் முளைத்துவிடுகிறார்கள். இருந்தாலும் எங்களால் முடிந்த வரையில், அனுமதியில்லாமல் வெளியாகும் படங்களை ஒளிபரப்பும் இணையதளங்களை முடக்கி வருகிறோம்’’ என்றனர்.
தமிழ் ராக்கர்ஸின் பல்வேறு பெயர்கள் :
Tamilrockers .cc
Tamilrockers .to
Tamilrockers .be
Tamilrockers .pm
Tamilrockers .ws
Tamilrockers .lu
Tamilrockers .la
Tamilrockers .ac
No comments:
Post a Comment